<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 21 ஜூலை, 2014

செவ்வாய், 8 ஜூலை, 2014

கலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

கலால்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.


புதுச்சேரியில் மத்திய அரசின் செயல்பாட்டில் இயங்கும் கலால் மற்றும் சுங்கத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கப்பட்ட சம்பளத்தை குறைத்ததை கண்டித்தும் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் அமைத்த காரணத்திற்காக அங்கு பணியாற்றிய நான்கு ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 7.07.2014 காலை 9மணி அளவில் கலால்துறை அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 20க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் சுப்பரமணி,மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைபொதுச்செயலர் குமார் ஆகியோர் பேசினார்கள்.கலந்து கொண்ட அணைவருக்கும் மாவட்டசங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Tuesday, 08 July, 2014 சுற்றறிக்கை எண்:153-மாநில செயலகக் கூட்டம்




வெள்ளி, 4 ஜூலை, 2014

புதுச்சேரி மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரல் ஆர்ப்பாட்டம்...

மாநில மாவட்ட நிர்வாகங்களில் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலச்சிய போகிக்கினை கைவிடு...

தர்மபுரி மாவட்டத்தில் 32 தோழர்களுக்கு வழங்கப்பட்ட பழிவாங்கல் உத்தரவை ரத்து செய்...

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் பிஎஸ்என்எல்  தலைமையக உத்தரவை முறையாக அமல்படுத்து...
என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி...

புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் ஆகியவை சர்பில் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை 4.7.2014  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கதின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஏ.சுப்பரமணியன்,மாவட்ட உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன்,அகில இந்திய துணைப்பொதுச்செயலர் சி.குமார்,மாநில அமைப்பு செயலர் எஸ்.உஷா அவர்களும் பேசினார்கள்.இறுதியாக மாவட்ட செயலர் பி.மகாலிங்கம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.இப்போராட்டத்தில் 97 தோழர்கள்,தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

புதுச்சேரி மாவட்ட செயற்குழு முடிவுகள்..

         BSNL ஊழியர் சங்கம்- புதுச்சேரி
               
மாவட்ட செயற்குழு முடிவுகள்:

1. BSNL  ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு 26.06.14 அன்று நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
* அனைத்து கிளைகளையும் உடனடியாக கூட்டி கிளை மாநாடு ஜுலை இறுதியில் நடத்தி முடிப்பது.

*மாவட்ட மாநாடு ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல்வாரத்தில் மாநில செயலருடன் கலந்து பேசி நடத்துவது.

* மாநிலச்செயற்குழு முடிவின் அடிப்படையில் மாநில மாநாடு நடத்துவதற்கு ஒவ்வொரு உறுப்பினரிடம் ரு.250ஐ வசூல் செய்து உடனடியாக அனுப்புவது.

* மாநிலச்சங்க அறைகூலவலான ஜூலை 04 ஆர்ப்பாட்டம், ஜூலை 11.07.2014 தர்ணா ஆகியவற்றை புதுச்சேரியில் நமது சங்கமும்,ஒப்பந்த ஊழியர்சங்கமும் இணைந்து சிறப்பாக நடத்துவது.

* சுழல் மாற்றல் பிரச்சனையை மாநிலச்செயலருடன் பேசுவது.

* மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அடுத்த செயற்குழுவில் அமைப்பது.
            ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
                                                 தோழமையுடன்

                                      A.சுப்பரமணியன் - மாவட்டசெயலர்,

வியாழன், 3 ஜூலை, 2014

Wednesday, 02 July, 2014 letter to CGM -regarding staff problems


Wednesday, 02 July, 2014 கேரள மாநிலத்தில் BSNL வளர்ச்சியும், சில மத்திய சங்க செய்திகளும்,


Wednesday, 02 July, 2014 மத்திய சங்கத்தின் புதிய சாதனை


Tuesday, 01 July, 2014 சுற்றறிக்கை எண்:148- கூட்டு போராட்டக் குழு நிர்வாகத்துடன் சந்திப்பு.





Monday, 30 June, 2014 IDA to be increased



IDA to be increased by 2.9% from 1st July, 2014, which raised from 88.4% to 91.3%.