<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

சனி, 10 பிப்ரவரி, 2018

தோழர் A.G.பசுபதி மறைந்தார்

தமிழக NFPE P4 சங்கத்தின் தமிழ் மாநில செயலாளராக பல ஆண்டு காலம் பணியாற்றிய தோழர் A.G.பசுபதி அவர்கள் 07.02.2018 அன்று இரவு 10.00 மணிக்கு சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். மிகச் சிறந்த போராளியான தோழர் பசுபதி தற்போது தமிழக தபால் ஊழியர்களின் ஓய்வூதியர் அமைப்பின் புரவலராகவும் பணியாற்றி வந்தார். தோழர் பசுபதிக்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.

BSNL டவர்கள் பராமரிப்பு OUTSOURCING தொடர்பாக பாராளுமன்றத்தில் தரப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான செய்தி... BSNL டவர்களை பராமரிப்பது OUTSOURCING தரப்படுவது தொடர்பாக மக்களவையில் 07.02.2018 அன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில் 26,287 டவர்கள் பராமரிக்க BSNL டெண்டர் விட்டுள்ளதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிலில் இந்த OUTSOURCINGகிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 08.02.2018 அன்று BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்களை சந்தித்த நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந்த் ஆகியோர் இந்த பிரச்சனை தொடர்பாக விவாதித்தனர். டவர்கள் பராமரிப்பினை OUTSOURCING விடுவது தொடர்பாக நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்காத சூழ்நிலையில், டவர்களின் பராமரிப்பு பணிகள் OUTSOURCING விடுவதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை என எவ்வாறு மக்களவையில் பதிலளிக்கப்பட்டது என தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கான டெண்டரை மூன்றாண்டுகளுக்கு முன் BSNL வெளியிட்டதாக BSNL CMD தெரிவித்தார். ஆனால் அதன் மீது சில தனியார் நிறுவனங்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த OUTSOURCING திட்டத்திற்கு BSNLன் நிர்வாகக் குழுவோ அல்லது இயக்குனர் குழுவோ இதுவரை ஒப்புதல் தரவில்லை. ஆகையால் இந்த பிரச்சனையை தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் விவாதிக்கவில்லை என்று BSNL CMD தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட இந்த பதிலில் தொழிற்சங்கங்களின் மீது சுமத்தப்பட்ட சந்தேகம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தெரிவித்ததை BSNL CMD ஏற்றுக் கொண்டார்.


BSNL-MTNL இணைப்பு? BSNL-MTNL இணைப்பு பிரச்சனை அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக சில மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. MTNL நிறுவனத்தை பங்கு சந்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், MTNLன் கடன் சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், MTNL பகுதிகளில் நமது வலைத்தளத்தை விரிவு படுத்துவதற்கு அதிகமான் நிதி தேவைப்படுவதால் தேவையான நிதி உதவியை அரசாங்கம் செய்ய வேண்டும் மற்றும் BSNL மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே விதமான ஊதிய விகிதம் இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பின்னரே அரசாங்கம் இணைப்பு தொடர்பாக திட்டமிட வேண்டும் என்று BSNLல் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


மத்திய அமைச்சருடன் சந்திப்பு மற்றும் இதர இயக்க செய்திகள்


ஊதிய மாற்றம் எங்கள் உரிமை- அடைந்தே தீருவோம் BSNL எங்கள் உயிர் மூச்சு- அதனை காத்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் துவங்கிய 5 நாட்கள் சத்தியாகிரகத்தின் (30.01.2018) முதல் நாள் தமிழக காட்சிகள்=1