<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 24 மே, 2018

AUAB defers the call for walk-out and conducting rallies on 28.05.2018, against Subsidiary Tower Company.

Based on the notice issued today, by the All Unions and Associations of BSNL, for organising walk-out and rallies on 28-05-2018, the CMD BSNL invited the leaders of the AUAB for talks. The talks started at 16:30 hrs. and lasted for almost two hours. In the meeting, the CMD BSNL informed the AUAB leaders that the item of Subsidiary Tower Company is not there in the agenda for the BSNL Board meeting to be held at Hyderabad on 28-05-2018. He also made an appeal to withdraw the struggle. Thereafter, a meeting of the AUAB was held. In view of the information given by the CMD BSNL, the meeting unanimously decided to defer the call for organising walk-out and rallies on 28-05-2018. 

[Date : 

பன்னாட்டு கம்பெனிகளுக்காக மக்களை பலியிடுவதா?







தோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம்



இயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் கூடுகிறது துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுக்க 28.05.2018 அன்று வெளிநடப்பு போராட்டம் இதுவரை புது டெல்லியில் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்று வந்த BSNL இயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. எப்போதும் டெல்லியில் நடைபெறும் இயக்குனர் குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற வேண்டிய அவசியம் என்ன? தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு துணை டவர் நிறுவனம் செயலாக்காத்தை அமலாக்கவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அமைதியாக இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஹைதராபாத்தில் நடத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 23.05.2018 அன்று மதியம் இரண்டு மணிக்கு புது டெல்லியில் NFTE சங்க அலுவலகத்தில் AUABயின் அவசர கூட்டம் நடைபெற்றது. AIBSNLEA பொது செயலாளர் தோழர் பிரகலாத்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- 1. துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் பெருந்திரள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது. AUABயின் அனைத்து சங்கங்களின் பொது செயலாளர்களும் ஹைதராபாத் நேரடியாக சென்று அந்த இயக்கங்களுக்கு தலைமையேற்பது. 2. 28.05.2018 அன்று நாடுமுழுவதும் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து வெளி நடப்பு செய்து துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக பேரணிகளை நடத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திட வேண்டும். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மாநில சங்கங்கள் உடனடியாக அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.


தோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள தோழர் மோனி போஸ் நினைவு கருத்தர்ங்கதிற்கு நாம் திட்டமிட்டபடியிலான எண்ணிக்கையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்களை உறுதி செய்வோம். நமது கருத்தரங்கத்தினை வெற்றி பெற செய்வோம்.


மனித வள இயக்குனருடன் சந்திப்பு



சனி, 12 மே, 2018

The DoT has issued a letter on 27th April, 2018, to the CMD BSNL, on the wage revision of Non-Executives of BSNL. The crux of this letter is that, BSNL Management could take steps for wage settlement of the Non-Executives in BSNL, through negotiations. Certainly, this is a welcome development. At the same time, we wish to state that all hurdles for wage revision are not removed. For instance, the DPE, even in it’s recent letter dated 18th April, 2018, has categorically mentioned that BSNL does not fall under the category of PSUs which are eligible for wage revision. It is also stated in that letter that, Cabinet approval is required for BSNL’s wage revision. In the talks held between the AUAB and the Hon’ble Minister of State for Communications on 24.02.2018, it has been agreed by the Hon’ble Minister that the issue of BSNL’s wage revision would be taken for the approval of the Cabinet. Presently, the DoT is taking steps for the implementation of the Hon’ble Minister’s assurance. Under these circumstances, the DoT has issued clearance to the BSNL to start negotiations for the wage revision of the Non-Executives. BSNLEU will utilise this letter for the commencement of negotiations for wage revision between the Recognised Unions and Management.


புதன், 9 மே, 2018

மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம் தனி டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்தும் முடிவை திரும்ப பெற கோரியும் PONDY அனைத்து சங்கங்களும் மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம்




மக்கள் மத்தியில் பிரச்சாரம் துணை டவர் நிறுவனத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்களை நடத்த அகில இந்திய AUABயின் அறைகூவலை ஏற்று தமிழகத்தில் 07.05.2018 அன்று நடைபெற்ற கூட்டங்களின் ஒரு சில காட்சிகள்.





மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம் தனி டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்தும் முடிவை திரும்ப பெற கோரியும் அனைத்து சங்கங்களும் மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம்


புதன், 2 மே, 2018

தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி காலமானார். இந்திய தபால் தந்தி இயக்கத்தின் மூத்த தோழரும், தோழர் K.G.போஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான அருமை தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் தனது 95ஆவது வயதில் 30.04.2018 அன்று மாலை காலமானார். சிறிது காலமாக உடல் நலக் குறைவால் கொல்கொத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். BSNL ஊழியர் சங்கம் உருவான முதல் மாநாட்டில் அவர் நமது சங்கத்தின் புரவலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவு BSNL ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கே ஒரு பெரும் இழப்பு. தோழர் சிசிர் பட்டாச்சார்ஜிக்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்கிக்கொள்கிறோம். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 01.05.2018 மாலை முதல் மூன்று நாட்களுக்கு நமது சங்கத்தின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் படிக்க


தோழர் அசோக் மித்ரா மறைந்தார் முது பெரும் பொருளாதார அறிஞரும், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பணியாறியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் அசோக் மித்ரா 01.05.2018 அன்று காலை கொல்கொத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள தோழர் அசோக் மித்ரா தனது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் லட்சியங்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையத்திலும் பணியாற்றியிருந்த தோழர் அசோக்மித்ரா பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களின் மீது எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். 90 வயதான தோழர் அசோக் மித்ரா அவர்களின் மறைவிற்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. மேலும் படிக்க


03.05.2018- கோரிக்கை தினம் அகர்தலா மத்திய செயற்குழு முடிவான கருப்பு அட்டை அணிந்து 03.05.2018 அன்று ஆர்ப்பாட்டம்